கோவை: மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்' (எம்.எஸ்.எஸ்.சி.,) திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்தார்.
இது குறித்து, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை தபால் கண்காணிப் பாளர் கோபாலன் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், எம்.எஸ்.எஸ்.சி., திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர குறைந்த பட்ச முதலீட்டு தொகையாக, ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை செலுத்தலாம்.
முதிர்வு காலம் இரண்டு ஆண்டுகள் மற்றும் காலாண்டு கூட்டு வட்டி 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது. வட்டி அதிகம் என்பதால், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை கோவையில், 2,500க்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன,'' என்றார்.