ஊத்துக்கோட்டை:தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், வீட்டுவரி மற்றும் கட்டணங்களை, 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தும் வசதியை, ஊரக வளர்ச்சித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 3,900க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 700க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில், 4,600க்கும் மேற்பட்ட வரி இனங்கள் வசூல் செய்யப்படுகின்றன.
சமீபத்தில் தமிழக அரசு, 'ஆன்லைன்' வாயிலாக வீட்டு வரி உள்ளிட்ட கட்டணங்களை கட்ட அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள், ஒவ்வொரு வீடாக சென்று வீட்டின் உரிமையாளர்களின் மொபைல் போன் எண்ணை பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.