� தென் சென்னை புறநகர் பகுதியில், நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, ஜி.எஸ்.டி., சாலையில் ஊரப்பாக்கம் அருகே தனியார் மருத்துவமனை அருகில் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் இரும்பு கம்பியுடன் பெயர்ந்து சாலையில் விழுந்தது. அந்நேரம் சாலையில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. � குன்றத்துார் சேக்கிழார் அரசுப் பள்ளி எதிரில் அமைந்துள்ள வணிக வளாக மாடியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் கிழிந்து, உயரழுத்த மின் கம்பத்தில் விழுந்தது. இதனால், குன்றத்துார் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை 4:00 மணி முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.