சிவகங்கை: சிவகங்கையில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வில் பங்கேற்காத வாகனங்கள் வியாழன் தோறும் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்று பெற்றுக் கொள்ளலாம், என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணிகள் நடந்தது. இதில் 128 வாகனங்கள் பங்கேற்றன. கலெக்டர் ஆஷா அஜித், செல்வராஜ் எஸ்.பி., தலைமையிலும் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் ஆய்வு நடந்தது.
இதில் 14 வாகனங்கள் முதலுதவிப்பெட்டி, பின்புற கேமரா, தீயணைப்புக்கருவி புதுப்பிக்கப்படாமல் உள்ளது பேக் ரேக் சேதமடைந்து இருத்தல், முன் பக்க கண்ணாடி உடைந்திருத்தல் போன்ற குறைபாடுகளால் தகுதி சான்று வழங்கப்படவில்லை. இந்த சிறு, சிறு குறைபாடுகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்று பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பு கூட்டாய்வில் பங்கேற்காத85 வாகனங்கள் வாரந் தோறும் வியாழன்று நடக்கும் சிறப்பு ஆய்வில் பங்கேற்றுபள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்கி கொள்ளலாம், என வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் தெரிவித்தார்.