மணலி, மணலி, பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்னை உர ஆலை உள்ளது. இது மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு, விவசாயத்திற்கு தேவையான யூரியா, என்.பி.கே., ஆகிய உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு, ரயில், லாரி வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது.
இதில், 500க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளர்களாகவும்; 1,500க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2015ல் நிரந்தர பணியில் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு, 10 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்கபடவில்லை.
ஐந்து ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், 10 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு வழங்காததை கண்டித்து, நேற்று 100க்கும் மேற்பட்டோர் உர ஆலை நுழைவாயலில் அமர்ந்து, காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.