தமிழில் படித்தவர்களை புறக்கணிக்கும் கேரளா..| Kerala ignores those educated in Tamil | Dinamalar

தமிழில் படித்தவர்களை புறக்கணிக்கும் கேரளா..

Updated : மே 26, 2023 | Added : மே 26, 2023 | கருத்துகள் (14) | |
மூணாறு--கேரளாவில் தமிழ்வழி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, கேரள முதல்வருடன், தமிழக முதல்வர் பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கேரளாவில், இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டங்களில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மூணாறு--கேரளாவில் தமிழ்வழி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, கேரள முதல்வருடன், தமிழக முதல்வர் பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.latest tamil news

கேரளாவில், இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் தமிழ் வழிக் கல்வி பயின்று வருகின்றனர்.


இதற்கிடையே, ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வை, கேரள அரசு 2012ல் அறிமுகம் செய்தது. இது, நான்கு பிரிவுகளில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், கேள்வித் தாள்கள் ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் மட்டுமே வழங்கப்படுவதால், தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதினாலும் வெற்றி பெற இயலாத சூழல் நிலவுகிறது. இதனால், ஏராளமானோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news

தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு மே 30ல் நடக்கிறது. தேர்வு எழுதினாலும் பலனில்லை என்பதால் தமிழ்வழி கல்வி பயின்றோர் குழப்பத்தில் உள்ளனர்.


'இப்பிரச்னைக்கு தீர்வு காண, கேரள முதல்வர்பினராயி விஜயனுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு நடத்த வேண்டும்' என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X