திருச்சி:வயலில் வாழைக்கு மருந்து அடித்த போது, மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே, கடியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 30. வயலில் வாழை சாகுபடி செய்துள்ள அவர், நேற்று காலை, வாழை மரங்களுக்கு பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, தோட்டத்துக்குள் அறுந்து, விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். அதில், மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஜீயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.