வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-மத்திய அரசு, பி.எம்., - கே.யு.எஸ்.யு.எம்., எனப்படும் பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
![]()
|
அத்திட்டத்தின் கீழ், விவசாயி தனியாக அல்லது பல விவசாயிகள் சேர்ந்து, தங்களின் நிலத்தில் 500 கிலோ வாட் முதல் 2 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம்.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தியது போக, மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் நிரந்தர வருவாய் கிடைக்கும்.
தமிழகத்தில் பிரதமரின் திட்டத்தின் கீழ், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் விவசாயிகளிடம் இருந்து, யூனிட் அதிகபட்சம், 3.30 ரூபாய் என்ற விலையில், 420 மெகா வாட் வாங்க, பிப்ரவரியில் மின் வாரியம் 'டெண்டர்' கோரியது.
அதில், இரண்டு விவசாயிகள், 3 மெகா வாட்டுக்கு மட்டும் மின் நிலையம் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதை, மின் வாரியம் ஏற்கும்பட்சத்தில், 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.
![]()
|
விவசாயிகளிடம் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற்கு இழப்பீடாக, மத்திய அரசு, கொள்முதல் அடிப்படையிலான ஊக்கத்தொகை என்ற பெயரில், 1 யூனிட்டிற்கு 40 காசு அல்லது 1 மெகா வாட்டிற்கு ஆண்டுக்கு 6.60 லட்சம் ரூபாய் என, இரண்டில் எது குறைவோ, அந்த தொகையை, மின் வாரியத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும்.
பிரதமரின் சூரியசக்தி மின் திட்டம் தொடர்பாக, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே, கிராம அளவில் கூட்டங்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இத்திட்டத்தில் மின் நிலையம் அமைக்க பலர் முன்வருவர் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement