வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-நாடு முழுதும் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் சேர்த்து, எம்.சி.சி.,யே கவுன்சிலிங் நடத்தும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
![]()
|
அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளின் இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்றும், புதிய நடைமுறையை அமல்படுத்த, மாநில அரசுகள் தங்களின் இடஒதுக்கீட்டு விதிகளை சமர்ப்பிக்குமாறும், மாநில அரசுகளின் சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
![]()
|
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களை, எம்.சி.சி., நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது; தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement