கரூர்: கரூரில் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் கூறியுள்ளார்.
மேலும் அவர், சோதனைக்கு சி.ஆர்.பி.எப்., வீரர்களையும் அழைத்துவரவில்லை. முறையான தகவல் அளிக்கப்படவில்லை. தற்போது 9 இடங்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக வருமான வரித்துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement