குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நேற்று மாலை, 5:00 மணியளவில் இடி, மின்னல் என பலத்த மழை வருவது போல் வானம் அச்சுறுத்தியது. ஆனால் சிறு துாறலுடன் நின்று விட்டது.
பெருமழையால், மின் சாதனங்கள் பழுதாகும் என மின் வினியோகம் தடை செய்யப்பட்டது. ஆனால் மழை வராததால் மின் இணைப்பு சிறிது நேரத்தில் கொடுக்கப்பட்டது. வட்டமலை பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகளில், மக்கள் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அந்த வேளையில், லேசான மழை வந்ததால், கூட்டம் கலைய தொடங்கியது. இதனால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர். ஆனால் சற்று நேரத்தில் மழை நின்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.