நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் முகமை (பிளேஸ்மென்ட் ஏஜென்சி) மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அங்கீரிக்கப்பட்ட, விருப்பமுள்ள பணியமர்த்தும் ஏஜென்சிகள், ஏற்கனவே அரசு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியதற்கான தகுதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அலுவலகம் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே தகுதி பெற்ற நிறுவனங்கள் மட்டும், தங்கள் நிறுவனம் தொடர்பான ஆவணங்களுடன், தங்களது விலை புள்ளிகளை ஜூன், 2 மாலை, 3:00 மணிக்குள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அட்மா திட்ட இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.