வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, தொட்டியப்பட்டி கிராமத்தில் கல்லுப்பாளையம் செல்லும் வழியில், 2004ல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த வளாகம் பின்னர் பராமரிக்கப்படவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'வசதி உள்ளவர்கள் வீடுகளில் கழிப்பறை கட்டி பயன்படுத்தி வருகின்றனர். வசதி இல்லாத பலர், பொது கழிப்பறையையே நம்பியுள்ளோம். தற்போது பயனற்று கிடக்கும் கழிப்பறையால் யாருக்கும் பயன் இல்லை. பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக திறந்த வெளியையே பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடம் அமைய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.