எருமப்பட்டி: எருமப்பட்டி, அண்ணா நகரில் முட்புதர்கள் மண்டிய பொது கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
எருமப்பட்டி, அண்ணா நகர் பகுதி மக்களின் வசதிக்காக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, டவுன் பஞ்., சார்பில், நவீன பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. திறக்கப்பட்டு ஓராண்டு கூட பொது மக்கள் பயன்படுத்தாத நிலையில், கழிப்பிடத்தை பராமரிக்காமல் டவுன் பஞ்., அதிகாரிகள் பூட்டி வைத்தனர். இதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளதால் கழிப்பிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி, அருகில் செல்ல முடியாத வகையில் உள்ளது.
எனவே, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் முட்புதர்களை வெட்டி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.