எலச்சிபாளையத்திலிருந்து, ராசிபுரம் செல்லும் சாலையோரத்தில் குப்பை கிடங்கு உள்ளது.
இங்குள்ள குப்பையில் இருந்து, அதிகளவில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு சில நாட்களில், குப்பைக்கு தீ வைப்பதால் சுற்று வட்டார பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அச்சமயத்தில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆகவே, சாலையோரத்தில் குப்பையை கொட்டாமல், சற்று உள்ளே தள்ளி குப்பையை கொட்ட வேண்டும்.