உடல் வலுவாக இருந்தால் தான் உங்கள் குழந்தைகளுடன் சோர்வின்றி விளையாட முடியும். உங்கள் பேரக்குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல முடியும். உடற்பயிற்சியால் மட்டும் தொப்பையை குறைக்க முடியாது. முறையான உணவுப்பழக்கமும், மனநலமும் தொப்பையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 60 நாட்கள், கீழ்க்கண்ட 10 பழக்கங்களை பின்பற்றுவதால் தொப்பையை குறைக்கலாம்.
1.ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள் :
முட்டை, கீரை வகைகள், பாதாம், இறைச்சி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். வளர்சிதை மாற்றம் மூலம்
கொழுப்பை எரிக்க உதவும். உடல்பருமன், நோய் பாதிப்பை தடுக்கும்.
2. நன்றாக தூங்குங்கள் :
நல்ல படுக்கையில், இருண்ட அறையில் உறங்குங்கள். இரவு 9 முதல் 10 மணிக்குள் உறங்க பழகுங்கள். அறையின் வெப்பநிலை 17 முதல் 20 செல்சியஸ் இருப்பது நல்லது.
![]()
|
3. உடற்பயிற்சி அல்லது உடலுழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
வாரத்திற்கு 3 முதல் 5 மடங்கு எடையை தூக்குங்கள். கார்டியோவை விட எடைகள் தூக்குவது, அதிக கலோரிகளை எரிக்கும். உகந்த ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு
10 முதல் 20 அடிகள் நடக்க பழகுங்கள்.
4. அதிக புரோட்டீன் உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்:
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இது உங்களை திருப்தியாக உணர வைக்கும். அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.
![]()
|
செரிமானத்திற்காக 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கலாம்.
5. மன அழுத்தம் ஏற்படுத்தும் நபர்களை தவிருங்கள் :
உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம், திறந்த மனதுடன், பொறுப்புள்ள மற்றும் உங்களை மதிக்க கூடிய நபர்களுடன் பழகுங்கள். மன அழுத்தம் கார்டிசோல் உற்பத்தியை அதிகரிக்கும். கார்டிசோல் புரதம், கொழுப்பு மற்றும் கீட்டோன்களை சர்க்கரையாக மாற்றுகிறது.
6. உரிய இடைவெளியுடன் விரதம் இருங்கள் :
4 முதல் 8 மணி நேரத்திற்குள் உணவு எடுத்து கொள்வது செரிமான மண்டலத்துக்கு உரிய ஓய்வு கொடுப்பது ஆகும். விரதம் இருப்பதால், தெளிவு, அதிக ஆற்றல், ஆசை
குறைதலை உணரலாம்.
![]()
|
7. அதிக தண்ணீரை குடியுங்கள் :
நாளொன்றுக்கு 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான சருமம், இளமை தோற்றம், சிறந்த வளர்சிதை மாற்றம், பசியை குறைக்கும்.
8. இதெல்லாம் தவிர்த்து விடுங்கள் :
ஆல்கஹால், கார்போஹைட்ரேட், அதிக சர்க்கரை இவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள். இதில் அதிகம் இன்சுலின் உள்ளது. அதிக இன்சுலின், கொழுப்பு கரைவதை
தடுத்துவிடும்.
![]()
|
9. சரியானதாக இருக்க முயற்சி செய்யாதீர் :
எப்போதும் சரியானவராக இருக்க முயற்சிக்க வேண்டாம். 80 சதவீதம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். 20 சதவீதம் நீங்கள் விரும்பும் உணவை எடுத்து
கொள்ளுங்கள். சரியானதாக இருக்க முயற்சிப்பது நம்ப முடியாத எதிர்பார்ப்புகளை உருவாக்கும். எனவே நீங்கள் சிந்திப்பதை நிறுத்த முடியாது. முழுமையாக இருப்பதை
விட, சிறப்பாக இருக்க முயற்சியுங்கள்.
10. கலோரிகளை குறையுங்கள் :
உடலுக்கு தேவைப்படும் 300 முதல் 500 கலோரிகள் குறைவாக எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் பசியுடன் இருக்கும் போது பிளாக் காபி, நீர்ச்சத்து பானங்கள் அருந்துவது, இரவு உணவுக்கு பிறகு பல் துலக்குவது, மெதுவாக உணவு உண்பது போன்றவற்றை முயற்சி செய்யுங்கள்.