ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது: முதல்வர் ஸ்டாலின்
ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

Updated : மே 26, 2023 | Added : மே 26, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
ஒசாகா: மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்பதாக ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள், முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உலக
Tamil Nadu welcomes Japanese investments with red carpet: Chief Minister Stalin  ஜப்பான் முதலீடுகளை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஒசாகா: மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்பதாக ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள், முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். மேலும், சில நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இரண்டு நாட்கள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் கிளம்பினார். அங்கு ஜப்பானின் ஒசாகாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை ஒசாகாவுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார்.



ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவுடன் இணைந்து, அங்கு இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது: ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்கிறது. மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம்.



தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகம் பெறும் நாடு இந்தியா தான். இந்தியாவில் தமிழகம் தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னிலையில் விளங்குகிறது. உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய அழைக்கிறோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (17)

Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
27-மே-202304:09:42 IST Report Abuse
Palanisamy T இந்த வரவேற்புரையை ஜப்பான் மொழி யில் பேசினீர்களா அல்லது தமிழில் பேசினீர்களா? ஏனென்றால்.சிங்கப்பூர் பயணத்தின் போது நீங்கள் முதலீட்டார் களை கவருவதற்கு சிரமப் பட்டதாக அறிந்தேன். முதலீட்டார்களை கவருவதற்கு பொருளாதாரத் துறை யிலும் நிதித் துறையிலும் நல்ல அனுபவமும் ஆற்றலும் வேண்டும். நல்ல மொழிப் புலமையும்வேண்டும். அப்போது தான் தமிழகம் நல்ல முதலீடுகளை பெறமுடியும். வளர்ச்சியும் பெரும். ஐந்துமுறை முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் நல்ல வளங்கலிருந்தும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுவர முடியவில்லையே. முன் பெல்லாம் பாலைவனமாகயிருந்த மத்திய கிழக்கு நாடுகள் இப்போது சோலைவனமாக மாறிவருகின்றது. சிங்கப்பூரும் ஆரம்பத்தில் அப்படித்தான். அவர்களின் ஆங்கிலமொழிப் புலமை அப்படி
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
27-மே-202301:01:48 IST Report Abuse
C.SRIRAM சிகப்பு கம்பளத்துக்கு கீழ் ஊழல் தலை விரித்து ஆடும் என்பதையும் சொல்லிவிடுவது நலம்
Rate this:
Cancel
26-மே-202321:27:32 IST Report Abuse
ராமகிருஷ்ணன் துண்டுசீட்டு பார்த்து பேசும் போதே திக்கி திணறுபவர் அங்கு எப்படி பேசினார் என்ற வீடியோ, ஆடியோ நிச்சயம் வெளிவராமல் செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X