பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது இசட்4 ரோட்ஸ்டர் (Bmw Z4 Roadster) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
லக்ஸுரி மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் தயாரிப்பில் முன்னணியாக விளங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது புகழ்பெற்ற இசட்4 ரோடுஸ்டர் காரை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த இசட்4 ரோட்ஸ்டர் காரை தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் பிஎம்டபிள்யூ ஷோரூம்களுக்கு வந்தடையும் எனக் கூறப்படுகிறது.
![]()
|
இது ஒரு ரோட்ஸ்டர் ரக கார் என்பதால், இதன் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும். 19 இன்ச் எம் லைட் அலாய் வீல்கள், எம் ஸ்போர்ட் பிரேக்குகள், பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் பகுதியில் க்ரே ஃபினிஷ், எக்ஸ்டீரியர் மிரர் கேப்ஸ், டிரேப்சோடியல் எக்ஸாஸ்ட் டெயில் பைப்புகள், ஆகிய அம்சங்கள் இந்த காரின் வெளிப்புறத் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது.
![]()
|
அதேபோல் இண்டீரியர் பற்றி பார்க்கும்பொழுது, லெதர் மற்றும் அல்கான்ட்ரா ஃபினிஷ் உடன் கான்ட்ராஸ்ட் தையல் மற்றும் நீல நிற பைப்பிங் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எம், ஸ்போர்ட் சீட்கள், எம் லெதர் ஸ்டியரிங் வீல் மற்றும் கூடுதலான அட்ஜெஸ்மென்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. அதேபோல், வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப கண்ணாடியைக் கருப்பு நிறத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
![]()
|
பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை, இந்த பிஎம்டபிள்யூ இசட் 4 கார் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும் இது, 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.5 நொடியில் பிக்கப் செய்துவிடுமாம்.
![]()
|
மேலும், உட்புறத்தில், அனைத்து தகவல்களையும் வழங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. அடாப்டிவ் ஹெட்லைட், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பேக்கேஜ், எம் சீட் பெல்ட், ஹார்மன் கார்டன் சரவுண்ட் சிஸ்டம், கம்ஃபோர்ட் ஆக்ஸஸ், டிரைவிங் அசிஸ்டென்ட்,ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிஎம்டபிள்யூஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பார்க்கிங் அசிஸ்டன்ட், ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
தனித்துவமான பெயின்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி, ஆல்பைன் ஒயிட், பிளாக், சபையர், பனிப்பாறை சில்வர், போர்டிமாவோ நீலம், சான் பிரான்சிஸ்கோ ரெட், தண்டர்நைட், ஸ்கைஸ்க்ரேப்பர் கிரே மற்றும் ஃப்ரோஸன் க்ரே ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கும். ரூ89.30 லட்சம் என்ற விலையில் இந்த பிஎம்டபிள்யூ இசட்4 ரோட்ஸ்டர் விற்பனைக்கு வந்துள்ளது. வருகிறது.