வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பராளுமன்ற கட்டட திறப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு பிரச்னைகளை கிளப்புகின்றனர் என புரியவில்லை என லோக்சபா பெண் சுயேட்சை எம்.பி. நவ்னீத் கவுர் ராணா கேள்வியெழுப்பியுள்ளார்
புதிய பாராளுமன்ற கட்டடத்தை வரும் 28-ல் பிரதமர் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.இது குறித்து மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி லோக்சபா தொகுதி சுயேட்சை பெண் எம்.பி. நவ்னீத் ராணா அளித்த பேட்டி,
![]()
|
பழைய பார்லிமென்ட் மூளையும், வேலையும் ஆங்கிலேயர்கள்ளால் கட்டப்பட்டது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட்டின் மூளையும் வேலையும் இந்தியர்களுடையது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு பிரச்னைகளை கிளப்புகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்களால் (எதிர்க்கட்சிகளால்) செய்ய முடியாத செயலை பிரதமர் நரேந்திர மோடி செய்து முடித்து விட்டார். இதை எதிர்க்ட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.