காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தை ஒட்டியுள்ள மதுராந்தோட்டம் தெருவில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஆக்கிரமித்து, பலர் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ளதால், மழை நீர் செல்ல வேண்டிய கால்வாயில், தற்போது கழிவு நீர் செல்கிறது.
கால்வாய் மேல் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு, அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, பேருந்து நிலைய வளாகத்தில் குட்டை போல தேங்கியது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. எனவே, சேதமடைந்துள்ள கால்வாயை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் விளைவாக, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், சேதமடைந்த கால்வாயில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.