செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில், தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல் என, பல்வேறு சேவைகளைப் பெற வந்து செல்கின்றனர்.
அருகே தேநீர் கடை, குளிர்பானக் கடை ஏதும் இல்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் சிரமப்படுகின்றனர். அரசு சார்பாக, 2020ம் ஆண்டு, தாசில்தார் அலுவலக வளாகத்தில், புதிய ஆவின் பாலகம் கட்டப்பட்டது.
ஆனால், ஆவின் பாலகம் கட்டப்பட்டதில் இருந்து, இன்று வரை திறக்கப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆவின் பாலகத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.