திண்டிவனம் : தாதாபுரம் ஊராட்சியில் தி.மு.க., அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். தலைமைக் கழக பேச்சாளர் நெல்லை முத்தையன் சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சேகர், ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பேசினர்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, ஒன்றிய பொருளாளர் திருஞானசம்மந்தம், துணைச் செயலாளர்கள் காளி, சுப்ரமணி, அன்பரசி ஜெயபிரகாஷ், மாவட்ட பிரிதிநிதிகள் மணி, காளி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அண்ணாதுரை, இளைஞரணி அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் பூமிலிங்கம், கிளைச் செயலாளர்கள் மற்றும் தி.மு.க., ஊராட்சி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.