கள்ளக்குறிச்சி : அம்மையகரத்தில் மாடு உண்ணிக்கு அடிக்கும் மருந்தை குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தை சேர்ந்தவர் பாம்பன் மகன் சின்னசாமி,47; கூலித்தொழிலாளி.
கடந்த 23ம் தேதி மதுபோதையில் பையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை சின்னசாமி தொலைத்து விட்டார். இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சின்னசாமியை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சின்னசாமி கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்த மாட்டு உண்ணிக்கு அடிக்கும் மருந்தை குடித்துவிட்டு, குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடன் அவரது குடும்பத்தினர் சின்னசாமியை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.