விக்கிரவாண்டி : முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கட்சியினருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை 10:00 மணியளவில் துணை பொதுச் செயலாளர் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடக்கிறது.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா கொண்டாடுவது, உறுப்பினர் படிவங்களை ஒப்படைப்பது கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
எம்.எல்.ஏ., - எம்.பி., மாநில, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.