திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் விதை விருட்சம் அறக்கட்டளை, கோவல் தமிழ்ச்சங்கம் இணைந்து மாணவர்களுக்கு செந்தமிழ் நாப்பழக்கம் பேச்சு பயிற்சி முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் விதை விருட்சம் அறக்கட்டளை, கோவல் தமிழ் சங்கம் இணைந்து மணம்பூண்டி ஓம் சக்தி திருமண மண்டபத்தில், மாணவர்களுக்கு 'செந்தமிழ் நாப்பழக்கம்' தலைப்பில் ஒரு நாள் பேச்சு பயிற்சி முகாம் நடந்தது.
கோவல் தமிழ்ச்சங்கத் தலைவர் உதியன் தலைமை தாங்கினார். விதை விருட்சம் அறக்கட்டளை சிறப்புத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கவிநிலவன் வரவேற்றார்.
நுாலகர் அன்பழகன் துவக்க உரையாற்றினார். பேச்சாளர்கள் உதயகுமார், சீனிவாசன், செல்வராஜ், தமிழாசிரியர் நாகராஜன், கனிமொழி, சௌமியா, கிருபா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு விதை விருச்சம் அறக்கட்டளைத் தலைவர் சிதம்பரநாதன் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.