ராமேஸ்வரம்:மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில், 1,400 விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் வேலை இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதனால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்கள் கன்னியாகுமரி, கேரளா கொச்சி யில் மீன்பிடி தொழில் செய்ய சென்று உள்ளனர்.
தடை காலம் முடிய இன்னும், 19 நாட்கள் உள்ள நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகுகளில் பழுது நீக்கும் பணியில் உரிமையாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.