திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பகுதியில் நடக்கும் மணல்திருட்டை தடுக்கக்கோரி வி.சி.,கட்சியினர், திட்டக்குடி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
பெண்ணாடம் வி.சி., நகர துணைசெயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் விடுதலைகாசி மற்றும் நிர்வாகிகள் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் கொடுத்த மனுவில், திட்டக்குடி தாலுகா, பெண்ணாடம், சவுந்திரசோழபுரம் அருகே வெள்ளாற்றில் இருந்து இரவு முழுதும் மணல் திருடப்படுகிறது.
சில அதிகாரிகளின் உதவியோடு நடக்கும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என' தெரிவிக்கப்பட்டுள்ளது.