கடலுார் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜன், செயலாளர் சுமித்ரா துவக்கவுரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் நாட்டுதுரை கோரிக்கை குறித்து பேசினார். மாநில அமைப்பு செயலாளர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பணப் பலனை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
நிர்வாகிகள் ஜனார்த்தனன், பாலகிருஷ்ணன், எட்டியப்பன், அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகசிகாமணி நன்றி கூறினார்.