மத்திய பா.ஜ., அரசிடம் காங்கிரஸ் 9 கேள்விகள்!: சிறு கையேடு தயாரித்து வெளியீடு
மத்திய பா.ஜ., அரசிடம் காங்கிரஸ் 9 கேள்விகள்!: சிறு கையேடு தயாரித்து வெளியீடு

மத்திய பா.ஜ., அரசிடம் காங்கிரஸ் 9 கேள்விகள்!: சிறு கையேடு தயாரித்து வெளியீடு

Updated : மே 27, 2023 | Added : மே 27, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு அமைந்து, ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளதை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒன்பது கேள்விகளை அடுக்கி உள்ளது. மேலும், இது தொடர்பான சிறு கையேட்டையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த 2014 மே மாதம், நாட்டின் பிரதமராக முதன் முறையாக பதவியேற்றார். ஐந்து ஆண்டுகளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு அமைந்து, ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளதை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒன்பது கேள்விகளை அடுக்கி உள்ளது. மேலும், இது தொடர்பான சிறு கையேட்டையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.latest tamil news


பா.ஜ.,வைச் சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த 2014 மே மாதம், நாட்டின் பிரதமராக முதன் முறையாக பதவியேற்றார். ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த அவர், 2019 லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றார்.

இதை அடுத்து, அதே ஆண்டில் மே மாதத்தில், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.


latest tamil news


தற்போது மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்து, ஒன்பது ஆண்டுகள் நிறைவுஅடைந்து உள்ளன.


விவசாயிகள் போராட்டம்இதை, அக்கட்சியினர் நாடு முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும், அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்லிலும், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்றும் அக்கட்சித் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை நோக்கி, எதிர்க்கட்சியான காங்., சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.

பொருளாதாரம், சீன எல்லை விவகாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சமூக நீதி, விவசாயிகள் போராட்டம் என ஒன்பது வகையான விவகாரங்களை பட்டியலிட்டு, '9 ஆண்டுகள், 9 கேள்விகள்' என்ற தலைப்பில் கையேடு ஒன்றை காங்., தயாரித்துள்ளது.

இது குறித்து, புதுடில்லியில் நேற்று காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கனவே, பிரதமர் மோடியின் ஆட்சியை நோக்கி, பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராகுல் கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றுக்கு இதுவரை, பிரதமர் மோடி பதில் அளிக்காமல் மவுனமாக இருக்கிறார்.

தற்போது, மத்தியில் பா.ஜ., ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்பது ஆண்டு கள் நிறைவடைந்துள்ளன. இப்போதாவது, பிரதமர் தன் மவுனத்தை கலைக்க வேண்டும்.

 பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமலாக்கம் காரணமாக, நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பணவீக்கமும், வேலையின்மையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே போவது ஏன்?

 போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, இதுவரை நிறைவேற்றாதது ஏன்

 இந்த அரசு எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் இருந்த மக்களின் பணத்தை, அதானி நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் தந்தது ஏன்

 பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் மீது, மவுனம் காப்பது ஏன்

 சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கிய பின்னும் கூட, இந்திய பகுதிகளை, அந்நாடு ஆக்கிரமித்துக் கொண்டே போகிறது. தேர்தல் லாபங்களுக்காக, வெறுப்பு அரசியலை கையில் எடுப்பது ஏன்

 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்

 பண பலத்தை வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை, கவிழ்ப்பது ஏன்

அரசியலமைப்பு சட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஏன்

கொரோனாவில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்காதது ஏன்?

இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி கட்டாயம் பதிலளிக்க வேண்டும். நாடு முழுதும், பா.ஜ., அரசின் தோல்விகளை, மக்களிடம் பட்டியலிட்டுக் காட்டும் வகையில், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை காங்., நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்தத் தலைவருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதே காங்கிரசின் வேலை. அது அக்கட்சியின் பிறவி குணம்.

காங்., ஆட்சியில் பலவீனமாக இருந்த நம் நாட்டின் பொருளாதாரம், தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக நம் நாடு மாறி உள்ளது.

காங்., ஆட்சியில் தான், நம் நாட்டின் நிலத்தை சீனா கைப்பற்றியது. கிழக்கு லடாக்கில் எல்லையில் ஆட்டம் காட்டிய அந்நாட்டிற்கு, பிரதமர் மோடி ஆட்சியில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டிய பின்னும் காங்., திருந்தவில்லை. 2024 தேர்தலிலும் அக்கட்சி தோல்வி தான் அடையும்.

கொரோனாவை நம் நாடு சிறப்பாக கையாண்டதாக உலக நாடுகளே பாராட்டிய நிலையில், காங்., மட்டும் வெறுப்பு அரசியலால் பொய் கூறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (13)

27-மே-202311:10:48 IST Report Abuse
பாமரன் வழக்கம் போல... மோடியை விடுவோம்... டெலிப்ராம்ப்டர் ரீடிங் மட்டுமே தெரிந்தவர் 🤭... வேறு யாராவது ஒருவராவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுதா 🤔 நீ ஏன் இந்த அயோக்கியத்தனம் பண்ணுனேன்னு கேட்டால்...
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
27-மே-202308:37:05 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga All these issues (except Covid) were related to the CON(G)RESS misrule. Instead of pointing out its own leaders, unnecessarily they have printed a booklet. The whole world including the UN, USA and other countries have credited and appreciated India for successful handling of the Covid by the Shri Modiji govt. Whereas, the Con(G)ress party only spreading romours and during the vaccination process, they indulged in backlash on using Indian manufactured vaccine. The people of India watching the gimmicks of the Con(g) lies.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
27-மே-202308:04:21 IST Report Abuse
Rajarajan காங்கிரஸிடம் சில அடிப்படை கேள்விகள். இந்தியா நான்கு துண்டாக யார் காரணம் ?? இந்த நான்கு துண்டுகளின், ரத்த வாரிசுகள் தொடர்பை பின்னோக்கி சென்று பார்த்தால், ஒரே ஒரு குடும்ப தலைமுறை ஒற்றுமை தென்படுகிறதே ?? எப்படி ? அவர்கள் எல்லாம் யார் ? நாடு விடுதலை பெற்ற பின், காந்தி சொன்னதுபோல் காங்கிரெஸ்ஸை கலைக்காதது ஏன் ?? விடுதலை வாங்கிய சமயத்தில், நாட்டில் வன்முறை தலைவிரித்து ஆடியபோது, ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காண்பிக்க சொன்ன புண்ணியவான் யார் ?? இந்தியா மீது பற்று இருந்தால், அதற்க்கு இத்தாலி உறவை தலைவர் ஆக்கியது ஏன் ?? காந்தி குடும்ப பெயருக்கும், நேரு குடும்ப பெயருக்கும் என்ன தொடர்பு ?? முதலில் இவற்றுக்கு காங்கிரஸ் பதில் சொல்லட்டும். இவற்றையெல்லாம் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மறைக்கவே கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X