தமிழில் வழிபடுவோம்
கற்பகம் பல்கலை, பன்னிரு திருமுறை ஆய்வு மையம், பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றம் ஆகியவை இணைந்து, சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்துகின்றன. இதில், வாழ்வியல் சடங்குகள், வழிபாடு, கோவில் பூஜை ஆகியவற்றை தமிழ் வழி செய்வது குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. கற்பகம் பல்கலையில், காலை 10:00 மணி முதல் நடக்கும் பயிற்சியில், சைவ அறிஞர்கள், திருப்பூசைவல்லார்கள் வகுப்புகள் எடுத்து பயிற்சி எடுக்கவுள்ளனர். தமிழ் ஆர்வலர்கள், கோவில் பூசகர்கள், அடியார்கள் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் முருக வழிபாடு
சிரவையாதீனம் கவுமார மடாலயத்தில், தவத்திரு கஜபூஜைச் சுந்தர சுவாமிகள், 29ம் ஆண்டு நினைவு குருபூஜை விழா நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு வேள்வி, அபிஷேகத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, 'இலங்கையில் முருக வழிபாடு' குறித்து சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு, பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையின் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.
குடிநோயை விரட்டலாம்
குடிப்பழக்கம் ஒரு நோய், என்பதை உணருவதே, அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் படி. குடிநோயிலிருந்து விடுபடுவதற்கு வழிகாட்டுகிறது, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
பாரதியை கொண்டாடுவோம்
மானுடம் பாடவந்த மகாகவி பாரதியாரால் தமிழ் உயர்ந்தது, தமிழால் பாரதி உயர்ந்தார். பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில், பி.எஸ்.ஜி., சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இதில், பி.எஸ்.ஜி., தொடக்கப்பள்ளி ஆசிரியர், சிவசக்தி வடிவேல், 'பாரதி...! பாரதி...! பாரதி...!' என்ற தலப்பில் உரையாற்றுகிறார். முன்னதாக, மாலை, 5:30 முதல் 6:00 மணி வரை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.