14 பஞ்சாயத்துகளுக்கு
பேட்டரி வாகனம் வழங்கல்
கிருஷ்ணகிரி,-காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில் துாய்மை பாரத இயக்கம் மற்றும், 15வது நிதிக் குழு மானிய திட்டத்தில், தலா, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 14 பஞ்.,களுக்கு குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பஞ்., தலைவர்களிடம் பேட்டரி வாகனங்களை வழங்கினார்.
பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தில், அ.தி.மு.க., நகர செயலர் விமல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், பஞ்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கி.கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,
பொது உறுப்பினர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரியில் வரும், 29ல், நடக்கும் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் சக்கரபாணி கலந்து கொள்கிறார்.
இது குறித்து, மாவட்ட செயலர் மதியழகன்
எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி தேவராஜ் மஹால் திருமண மண்டபத்தில், வரும், 29 காலை, 10:00 மணிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகிக்கிறார். தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பங்கேற்கிறார். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா கொண்டாடுவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சாராயம் விற்ற மூவர் கைது
அரூர், -அரூர் அடுத்த எஸ்.பட்டியில், சாராயம் காய்ச்சி விற்ற பச்சையப்பன், 53; சிவக்குமார், 47; ஊமத்தி அன்பழகன், 25 ஆகிய மூவரையும் கைது செய்த அரூர் போலீசார் அவர்களிடமிருந்து, 650 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
கலந்தாய்வு 29ம் தேதி தொடக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி,---தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இடஒதுக்கீட்டு கலந்தாய்வு வரும், 29 முதல், 31 வரை மூன்று நாட்கள் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடக்கிறது.
இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள்
முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூன், 1 முதல், 20 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, 1 முதல், 10 வரையும், இரண்டாம் கட்டமாக, 12 முதல், 20 வரையும் நடைபெறும். கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் இவற்றின் உண்மை சான்றிதழுடன் நகல், 5
பிரதிகள் நிழற்படம் ஐந்து பிரதிகள் எடுத்து வந்து, பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு பெற்றவர்கள் சேர்க்கைக்கான
கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என கல்லுாரி முதல்வர் முனைவர்
அன்பரசி தெரிவித்துள்ளார்.
சாலையோரங்களில் ஆபத்தான
மரங்களை அகற்ற கோரிக்கை
தர்மபுரி,-சாலையோரங்களில், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன், கோடை மழை பெய்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் மட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் உடைந்து விழுந்தும், வேரோடு சாய்ந்தும் வருகிறது. இதனால் போக்கு
வரத்து பாதிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் ஆபத்தான வகையில் உள்ள புளிய மரங்களை அகற்ற வேண்டும். இதே போன்று மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளில் ஆபத்தான வகையில் உள்ள புளியமரம் உள்ளிட்ட பிற மரங்களை அகற்றி, பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அகற்றப்படும் மரங்களுக்கு இணையாக, புதிய மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும்.