ராசிபுரம்,-ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 73.88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன், நேற்று தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., சின்ராஜ் முன்னிலை வகித்தார். மல்லியகரை - ராசிபுரம் -- திருச்செங்கோடு -- ஈரோடு சாலை முதல் சித்தர் கோவில் வரை உள்ள ஒன்றிய சாலையை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.