மேலுார் : மேலுார் வண்ணாம்பாறைபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முகாமில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்களுக்கு ரூ.2-கோடியே 88 லட்சத்து 17 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.
துணை பொது மேலாளர் ஹரிணி தலைமை வகித்தார். மகளிர் திட்ட உதவி இயக்குநர்கள் காளிதாஸ், மரியாமதேலம்மாள் பேசினர். மேலுார் பகுதியின் 26 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தலா ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்பட்டது. கறவை மாடு, வேளாண் கருவிகள் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ. 38 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முதன்மை மேலாளர்கள் ராம்பிரசாத், சரவணன் செய்திருந்தனர். மாணவர்களின் கலை, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவி பூமாரி, சக்தி சர்க்கரை ஆலை மேலாளர் உத்தண்டி, கிளை மேலாளர்கள் மாரியப்பன், குணவதி, வருண்குமார், வட்டார இயக்க மேலாளர் ராமு, ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, சண்முகபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.