ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கும் பணி துவங்கியது.
ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது.
ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலர் மன்னர் மன்னன் புத்தகங்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
ஸ்ரீமுஷ்ணம் சுற்று வட்டாரத்தில் உள்ள 80 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை பெற்றுச்சென்றனர்.