மதுரை : மதுரை ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்வி நிறுவனங்களின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.
நிறுவனத் தலைவர் சந்திரன், இயக்குநர் அபிலாஷ் ஆகியோர் நடத்தினர். மே 8 முதல் 26 வரை அரோபனா இந்தியன் ஐ.சி.எஸ்.இ., பள்ளி, ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி, ஆரோ விளையாட்டு அகாடமி ஆகிய இடங்களில் நடந்தது.
கூடைப்பந்து, இறகுபந்து, ஸ்குவாஷ், கால்பந்து, கிரிக்கெட், ஸ்கேட்டிங், நீச்சல், குதிரை ஏற்றம், கையெழுத்துப் பயிற்சி, மேற்கத்திய நடனம், கலை, கைவினை பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.