சின்னமனூர் : மாவட்டத்தில் கம்பம் மற்றும் தேனி உழவர் சந்தைகளில் நாள்தோறும் 30 முதல் 40 டன் வரை காய்கறிகள் விற்பனையாகிறது.
சின்னமனூர் உழவர் சந்தைக்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அதிகளவில் வருகின்றனர். ஆனால் உழவர் சந்தை பெரும் சுகாதாரக்கேட்டில் சிக்கி தவிக்கிறது.
சந்தைக்கு முன்பாக அழுகிய காய்கறிகள், பழங்களை கொட்டி வைக்கின்றனர். துர்நாற்றம் வீசுவதால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.உழவர் சந்தையை சுகாதாரக்கேட்டிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.