வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல நாட்களுக்கு பிறகு, மழை பெய்ததால், நிலவி வந்த வெப்பநிலை தணிந்தது. மேலும் பெய்ந்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

நேற்று(மே 26) அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு டில்லியில் மழை பெய்யும். மே 30 வரை வெப்பச் சலனம் ஏற்பட வாய்ப்பில்லை. ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே இருக்கும். ஜூன் 4ம் தேதி கேரளாவில் பருவமழை துவங்கும் என இந்திய வானிலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ந்தது. குறிப்பாக, காஜியாபாத், இந்திரபுரம், சப்ராலா, யமுனாநகர், குருக்ஷேத்ரா, ரேவாரி, பல்வால், நர்னால் உள்ளிட்ட பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ந்தது. பெய்ந்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது;
அடுத்த 2 மணி நேரத்தில் டில்லி- மற்றும் அதை ஒட்டிய சுற்றுப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 70 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மற்றும் பலத்த காற்று தொடரும் எனக் கூறியுள்ளது.
பாதிப்பு:
மோசமான வானிலை காரணமாக டில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் பயணம் செய்ய முடியாமல் விமான நிலையத்தில் அதிகம் பேர் காத்திருந்தனர்.