வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குடும்பம் கைது: 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள்
வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குடும்பம் கைது: 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள்

வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குடும்பம் கைது: 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள்

Added : மே 27, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: வட கொரியாவில் பைபிள் உடன் பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் பலவிதமான மற்றும் வினோதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை
North Korea Jailed 2-Year-Old For Life After Catching Parents With Bibleவடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குடும்பம் கைது: 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: வட கொரியாவில் பைபிள் உடன் பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் பலவிதமான மற்றும் வினோதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அந்நாட்டில் நடப்பது என்ன என்பது உடனடியாக வெளியில் தெரிவது கிடையாது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், 2022 ம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வட கொரியாவில் 75 ஆயிரம் கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் 2009 ல் பைபிள் வைத்திருந்த பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

கைதானவர்களில் 2 மாத கைக்குழந்தையும் அடக்கம். இக்குழந்தை உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முகாம்களில் இவர்கள் மோசமான சூழ்நிலையில் உள்ளனர். உடல்ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு 90 சதவீதம் பாதுகாப்பு அமைச்சகம் தான் பொறுப்பு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (8)

என்னதான் நடக்கும்? - marathahalli, bangalore,இந்தியா
27-மே-202317:36:02 IST Report Abuse
என்னதான் நடக்கும்? அந்த கிருஸ்துவர்களால் கொல்லப்படும் மக்களுக்கு ஆதரவாக உங்களால் பேச முடியுமா?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
27-மே-202317:14:52 IST Report Abuse
தமிழ்வேள் இங்குள்ள மிஷ நரிகள் வட கொரியா சென்று அங்குள்ள மக்களுக்கு பரலோக ராச்சியத்தை ஏசுவின் சுவையை காட்டலாமே ..குறைந்த பட்சம் அங்கு சிறைப்பட்டலுள்ள கிறிஸ்தவர்களை ஏசுவின் துணையோடு புனிதர்களின் வல்லமையால் விடுவிக்கலாம் அல்லவா ?
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-மே-202317:05:45 IST Report Abuse
MARUTHU PANDIAR பாதுகாப்பு அமைச்சகம் பொறுப்பு என்றால் வட கோரிய பாதிக்ககாப்பு அமைச்சகம் என்பதா? சரி..அமெரிக்காவே மூக்கால் தானே அழ முடிகிறது? வேறென்ன செய்ய முடியும்? இந்தியாவைத்த தான் வெட்கம் இன்றி மிரட்ட முடியும்++++சிறுபான்மையினர் மிரட்டப் படுவதாக கதை அளக்க முடியும்+++இன்று நேற்றல்ல இந்த கதை+++++உங்களால் முடிந்தால் கிம் மிடமோ , உய்குர் முஸ்லிம்களை வாட்டி வதைக்கும் சீனாவிடமோ இந்த கதையை அளந்து உரசி பாருங்களேன்++++அப்புறம் தெரியும் உங்க கதை+++ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா? யாரப்பா அங்க,,மனித உரிமை ஆளுங்க சைலெண்டாயிட்டாங்களே,,எங்க அவுங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X