பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்பட்டது. ஜாதியை முன்னிறுத்தி 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
கர்நாடகாவில் இம்மாதம் 20ம் தேதி பதவியேற்ற முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் மற்றும் எட்டு அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை.துறைகள் ஒதுக்குவது குறித்தும், அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாகவும் புதுடில்லியில் மூன்று நாட்களாக தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.
சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை முதல்வர், துணை முதல்வர் தனித் தனியாக சந்தித்து பேசினர். இறுதியாக காலியாக உள்ள 24 அமைச்சர் பதவிகளையும் நிரப்ப, கார்கே பச்சைக்கொடி காட்டினார்.
இந்நிலையில், இன்று காலை 11:45 மணிக்கு பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், புதியவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.. சாதி ரீதியில் அமைச்சர்களுக்கு பதவி வழங்கப்பட்டது.
![]()
|
இன்று நடந்த 24 அமைச்சரவை பட்டியலில் எந்தெந்த சமுதாயங்கள்? குறித்த விவரம் :
![]()
|
![]()
|
ஒக்கலிகா 4,
நாம்தாரி ரெட்டி 1,
எஸ்.சி., வலது 1,
பஞ்சிகா வீரசைவ லிங்காயத் 1,
எஸ்.டி., 2,
பிராமணர் 1,
ரெட்டி லிங்காயத் 1,
பஞ்சமசாலி லிங்காயத் 2,
எஸ்.சி., இடது 1.
சாதர் லிங்காயத் 1,
எஸ்.சி., போவி 1,
ஆதி பஞ்சிகா லிங்காயத் 1,
மொகவீரா 1,
முஸ்லிம் 1,
ஜெயின் 1,
மராத்தி 1,
ராஜு 1,
குருபர் 1,
ஈடிகா 1 என பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் யார்?
சாம்ராஜ்நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புட்டரங்க ஷெட்டி, அமைச்சர் பதவி எதிர்பார்த்திருந்தார். அவருக்கு, துணை சபாநாயகர் பதவி வழங்குவதற்கு கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹரிபிரசாத் அதிருப்தி
காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். இவர் ராஜ்யசபா உறுப்பினராக, வெவ்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராகவும், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியஅனுபவம் கொண்டவர்.
ஈடிகா சமுதாய கோட்டாவில், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பினார். ஆனால் ஈடிகா கோட்டாவில், மது பங்காரப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால், ஹரிபிரசாத் வருத்தம் அடைந்து உள்ளார். எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்வது குறித்து, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
***********
புதிய அமைச்சர்கள் யார் யார்?
ஹெச்.கே.பாட்டீல்
கிருஷ்ணபைரே கவுடா
செலுவராயசாமி
வெங்கடேஷ்
மஹாதேவப்பா
ஈஸ்வர் கன்ரே
ராஜண்ணா
தினேஷ் குண்டுராவ்
சரண பசப்பா தர்ஷனாப்பூர்
சிவானந்த பாட்டீல்
திம்மாபூர்
எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா
சிவராஜ் தங்கடகி
சரண பிரகாஷ் பாட்டீல்
மங்கள் வைத்யா
லட்சுமி ஹெப்பால்கர்
ரஹீம் கான்
டி.சுதாகர்
சந்தோஷ் லாட்
போசராஜு
பைரதி சுரேஷ்
மது பங்காரப்பா
எம்.சி.சுதாகர்
நாகேந்திரா
****