மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களுக்கு தொடர்ந்து முன்பதிவு அதிகரித்து வருவதனால் 2,92,000 எஸ்யூவிகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. தார், ஸ்கார்பியோ மற்றும் XUV700 கார்களுக்கு அமோகமான முன்பதிவு நடைபெற்று வருகிறது. டெலிவரி பணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் மஹிந்திரா நிறுவனம் டெலிவரியை அதிகரிக்க உற்பத்தி எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய எஸ்யூவிகளான XUV300, மற்றும் தார் 5 டோர் எஸ்யூவி ஆகியவற்றின் அறிமுகத்தை மஹிந்திரா நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கு மாற்றியுள்ளது.
![]()
|
மேலும், மஹிந்திராவின் முன்பதிவுகளின் எண்ணிக்கை தற்போது 2.92 லட்சத்தை கடந்துள்ளது. இவற்றில், ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய மாடல்களுக்கு அதிகபட்ச ஆர்டர்களை மஹிந்திரா பெற்றுள்ளது. இதுவரை, ஸ்கார்பியோ டெலிவரி செய்யப்படாமல் 1.17 லட்சம் வாகனங்கள் காத்திருப்பில் உள்ளன. அதேபோல், 3 லட்சம் எஸ்யூவிகளை டெலிவரி செய்வதற்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளதாக Q4 FY2023 நிதியறிக்கை முடிவுகள் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
![]()
|
அதெபோல், இரண்டாவது இடத்தில் மிகவும் பிரபலமான XUV700 எஸ்யூவி 78,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது. மேலும் மஹிந்திரா தார் மாடல் 58,000 யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தார் மாடலின் மாதந்திர உற்பத்தி எண்ணிக்கை 14,000 ஆக இருக்கலாம். இதுபோக, இரண்டாவது இடத்தில் மிகவும் பிரபலமான XUV700 எஸ்யூவி 78,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது. மேலும் மஹிந்திரா தார் மாடல் 58,000 யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
![]()
|
XUV300 மற்றும் XUV400 EV இணைந்து சுமார் 29,000 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. XUV400 சில நகரங்களில் உடனடியாகக் கிடைக்கும் அதே வேளையில், பெரும்பாலான வகைகளில் XUV300 மாடல் ஒரு மாதத்தில் டெலிவரி வழங்கப்படுகின்றது. இதன் உற்பத்தி திறன் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 யூனிட்கள் ஆகும். இதையடுத்து, பொலிரோ நியோ மற்றும் பொலிரோ எஸ்யூவிகள் 8,200 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. இரண்டுமே பெரும்பாலும் உடனடி டெலிவரிக்கு கிடைக்கின்றன.
இதனால், மஹிந்திரா அடுத்த 6 முதல் 7 மாதங்களில் உற்பத்தி திறனை 49,000 யூனிட்களாக உயர்த்தவும், ஒரு மாதத்தில் XUV 700 மற்றும் Scorpio N உற்பத்தி எண்ணிக்கையை 10,000 யூனிட்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் காத்திருப்பு காலம் குறையலாம்.