உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முக்கிய அடையாள சின்னமாக புதிய பார்லிமென்ட் வளாகம் திகழ்கிறது. அதிநவீன அம்சங்களுடன் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1272 எம்.பி.,க்கள் அமரும் வகையில் விசாலமானதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பார்லிமென்ட் கட்டடம் 1927ல் பயன்பாட்டுக்கு வந்தது.
![]()
|
இது பழமை அடைந்ததுடன், போதிய இடவசதியும் இல்லை. டில்லியின் பல்வேறு இடங்களில் அரசுக் கட்டடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் 'சென்ட்ரல் விஸ்டா' மறுசீரமைப்பு திட்டத்தை மத்திய அரசு 2019ல் அறிவித்தது. இதன்படி புதிய பார்லிமென்ட் வளாகம், பிரதமர் அலுவலகம், பிரதமர் இல்லம், ராஜபாதைபுனரமைப்பு, பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய மத்திய தலைமை செயலகம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.13 ஆயிரத்து 450 கோடி.இதில் ஒரு பகுதியாக ஆங்கிலேய கட்டடக்கலையில் கட்டப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்திற்கு பதிலாக, இந்திய கட்டடக்கலையில் புதிய பார்லிமென்ட் கட்ட, 2020 டிச., 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பணி நிறைவடைந்த புதிய பார்லிமென்ட்டை இன்று (மே 28ல்) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
![]()
|
பழைய பார்லிமென்ட் திறக்கப்பட்டு 96 ஆண்டுகள் கடந்த விட்டது. 'ஏசி' தீ தடுப்பு சிஸ்டம், நவீன ஆடியோ, வீடியோ சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த முடியாதது, நிலநடுக்க ஆபத்து பகுதியில்அமைந்திருக்கும் கட்டடம், எதிர்காலத்தில் அதிகரிக்கும் எம்.பி.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான கட்டாயம் ஏற்பட்டது.'டாடா' நிறுவனம் இதன் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டது.கொரோனா பரவலுக்கு மத்தியிலும்பிரதமர் மோடியின் முயற்சியால், 2.5 ஆண்டுகளில் பணி முடிக்கப்பட்டது.
![]() Advertisement
|
*பத்திரிகையாளருக்கு வசதி
பார்லிமென்ட் நடவடிக்கைகளை பார்ப்பதற்கு வசதியாக லோக்சபாஅரங்கில் பொதுமக்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர்கள்மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. செய்தி சேகரிப்புக்கு பத்திரிகையாளர்களுக்கு மட்டும் 530 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
![]()
|
* பிரதமர் 'விசிட்'
2023 மார்ச் 30ல் பிரதமர் மோடி பார்லிமென்ட் கட்டட பணியை பார்வையிட்டார். ஒரு மணி நேரம் அங்கிருந்தார். தொழிலாளர்களை சந்தித்தார்.
*தேசிய சின்னம்
புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் உச்சியில் அசோக சக்கர பீடத்தில், நான்கு சிங்கங்கள் நிற்கும் இந்திய தேசிய சின்னம் 2022 ஜூலை 12ல் திறக்கப்பட்டது. வெண்கலத்தால் ஆன இச்சிலையின் உயரம் 19.6 அடி. எடை 9500 கிலோ. இந்த சின்னத்தின் பீடத்தின் எடை 6500 கிலோ. இதை அப்படியே உச்சிக்கு எடுத்துச்செல்ல முடியாது என்பதால் 150 பகுதியாக பிரிக்கப்பட்டது. பின் மேலே கொண்டு சென்று ஒருங்கிணைக்கப்பட்டது.
![]()
|
* கடமை பாதை
'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 'ராஜபாதை' சீரமைக்கப்பட்டு 'கடமைப்பாதை' என பெயர் மாற்றம் செய்து 2022 செப்., 8ல் திறக்கப்பட்டது. இதற்கான செலவு ரூ. 477 கோடி. இப் பாதையின் இரு பக்கங்களிலும் புல்வெளி, வாகன நிறுத்துமிடம், மக்கள் அமர்ந்து இளைப்பாற நாற்காலிகள், கழிவறைகள், பல்வேறு உணவகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கேட் அருகே சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 28 அடி உயர சிலையும் திறக்கப்பட்டது.
![]()
|
*அருங்காட்சியமாக மாறும்
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி இருந்தபோது, அவர்களது அரசு நிர்வாகத்திற்காக டில்லியில் உயரமான 'ரெய்சினா ஹில்ஸ்' பகுதியில் பழைய பார்லிமென்ட் வளாகம் கட்டப்பட்டது.
* பிரிட்டனின் சர் எட்வின் லியுடென்ஸ், சர் ஹெர்பெர்ட் பெக்கர் இதை வடிவமைத்தனர்.
* ம.பி.,யில் உள்ள சவுத் யோகினி கோயிலை மாதிரியாக வைத்து பார்லிமென்ட் கட்டப்பட்டது.
* 1921ல் பணிகள் துவங்கிகட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆகின.
* 1927ல் அப்போதைய ஆங்கிலேய வைஸ்ராய் இர்வின் பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைத்தார். 'கவுன்சில் ஹவுஸ்' என அழைக்கப்பட்டது.
* கட்டுமானச் செலவு ரூ.88.4 லட்சம்.
* 560 அடி விட்டம் உடைய வட்ட வடிவில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
* 1946 டிச. 9: அரசியல் நிர்ணய சபையின் முதல்கூட்டம் நடந்தது.
* 1947 ஆக. 15: நள்ளிரவு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இதற்கான சிறப்பு கூட்டத்தில் பிரதமர் நேரு உரையாற்றினார்.
* மைய மண்டபம், ராஜ்யசபா, லோக்சபா நுாலகங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்துக்கும் இடையே தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
* மைய மண்டபத்தின் குவி மாடம் 98 அடி விட்டம் உடையது. இந்த மைய மண்டபத்தில் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலானது. ராஜ்யசபா, லோக்சபா கூட்டுக் கூட்டம் இங்கு நடக்கும்.
* முதல் தளத்தில் 144 துாண்கள் உள்ளன. ஒரு துாணின் நீளம் 27 அடி. 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
* 'கேட் நம்பர்-1' பிரதான நுழைவு வாயிலாக உள்ளது.
* இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் 1956ல் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட்டன.
* 2002ல் நுாலகம் திறக்கப்பட்டது.
* ஜனநாயகம் தொடர்பான பாரம்பரிய அருங்காட்சியமாக பாதுகாக்கப்பட உள்ளது.
![]()
|
*தமிழக செங்கோல்
புதிய பார்லிமென்டில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகில், தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதினம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் வைக்கப்படும். இது 1947ல்
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதன் அடையாளமாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து அப்போதைய பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டது.
![]()
|
*தொலை நோக்கு பார்வை
1971 மக்கள் தொகை கணக்கின் படி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களின் எண்ணிக்கை உள்ளது. 2026 வரை இதுவே தொடரும். இதற்கடுத்து தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதை கருத்தில் கொண்டும் புதிய பார்லிமென்டில் 1272 எம்.பி.,க்கள் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
*மோடி கண்டெடுத்த 'சிற்பி'
பிரதமர் மோடியின் கனவுகளை நனவாக்குபவர் பிமல் படேல். இவர் தான் புதிய பார்லிமென்ட் உட்பட 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை வடிவமைத்துள்ளார். குஜராத் முதல்வராக இருந்த போதே இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். சபர்மதி ஆசிரமத்தின் புனரமைப்பு, குஜராத் உயர்நீதிமன்றம், ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்(மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனத்தின் புதிய வளாகங்களை வடிவமைத்தார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் புனரமைப்பு பணிகளையும் மேற்கொண்டார்.
கலிபோர்னியா பல்கலையில் கட்டட வடிவமைப்பில் பி.எச்.டி., பட்டம் பெற்றவர் பிமல் படேல். 30 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர். உலசின் சிறந்த கட்டட வடிவமைப்பாளர் விருது (2001), பத்மஸ்ரீ (2019) வென்றுள்ளார். இவரது எச்.சி.பி., நிறுவனம் தான் 'சென்ட்ரல் விஸ்டா' வடிவமைப்புக்கான உரிமையை பெற்றது. திட்ட மதிப்பீடு, வடிவமைப்பு, வரைபடம், இடம் தேர்வு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு பணிகளை வெற்றிகரமாக செய்தது. இதற்காக ரூ. 229.75 கோடி வழங்கப்படும்.
![]()
|
டில்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்காக பெரிய இடத்தை தேர்வு செய்வது சவாலாக இருந்தது. இந்திய பாரம்பரியத்தை போற்றும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளோம். உலகத் தரம் வாய்ந்த பகுதியாக அமையும்''பிமல் படேல்
*சுரங்கப்பாதை
தற்போதைய பார்லிமென்ட் கட்டடம் கட்டிய போது, டில்லி நிலநடுக்க அதிர்வு மண்டலம் 2 ல் இருந்தது. தற்போது மண்டலம் 4 ஆக மாறியுள்ளதால் நிலநடுக்க ஆபத்து இக்கட்டடத்துக்கு அதிகம். இதனால் புதிய கட்டடம் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தில் கட்டப்படும் பிரதமர் இல்லம் - புதிய பார்லிமென்ட் இடையே சுரங்கப்பதை அமைக்கப்படுகிறது.
![]()
|
என்ன சிறப்பு
லோக்சபா, ராஜ்யசபா தவிர பிரதமர், லோக்சபா, ராஜ்ய சபா தலைவர்கள், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் கமிட்டி, மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் உட்பட 120 அலுவலகங்கள் அமையவுள்ளன. இதற்காக 4 மாடிகள் உள்ளன.முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன.கட்டட பரப்பளவு 64,500 சதுர மீட்டர்நான்கு மாடிகள் இருக்கும்.லோக்சபா கூரை தேசிய பறவையான மயில் வடிவிலும், ராஜ்யசபா கூரை தேசிய மலரான தாமரை வடிவிலும் உள்ளது.
இருக்கைகள் தற்போதைய லோக்சபாவை விட மூன்று மடங்கு பெரியது.எம்.பி.,க்களுக்கான இருக்கைகள் 60 செ.மீ., நீளம், 40 செ.மீ., உயரமாகவும், இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொன்றும் இரண்டு இருக்கை கொண்டதாக இருக்கும். இருக்கை முன்பு டச் ஸ்கிரீன் உள்ளிட்ட டிஜிட்டல் வசதிகள் இருக்கும்.நுாலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறை, கேன்டீன், பார்க்கிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மழைநீர் சேகரிப்பு, சோலார் மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது.எம்.பி.,க்கள் சந்தித்து பேசுவதற்கான ஓய்வறை திறந்தவெளி காற்று உட்புகும் வகையில் உள்ளது. இதன் அருகில் தேசிய மரமான ஆலமரம் உள்ளது.
\
தற்போதைய பார்லிமென்டில் தீ தடுப்பு வசதி இல்லை. புதியதில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர்களுக்கு 92 அறைகள் உள்ளன. இதில் ஆறு கமிட்டிகளுக்கான அறைகள் உள்ளன. தற்போதைய பார்லிமென்ட்டில் மூன்று உள்ளன. 26,045 மெட்ரிக் டன் இரும்பு, 63,807 மெட்ரிக் டன் சிமென்ட், 9689 கன மீட்டர் சாம்பல் நிற செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய பார்லிமென்ட் அருகில் ஒவ்வொரு எம்.பி.,க்கும் 40 சதுர மீட்டரில் அலுவலகம் அமைக்கும் 'ஷிரம் சக்தி பவன்' கட்டடம் அமைக்கும் பணி 2022 ஏப்ரலில் தொடங்கியது.
2024 மார்ச்சில் நிறைவடையும்.*நான்காவதுபெரியது
புதிய பார்லிமென்ட், உலகில் இருக்கைகள் அடிப்படையில் சீனா, ருமேனியா, ரஷ்யாவுக்கு அடுத்து நான்காவது பெரியது. கட்டட பணியில் நேர்முக, மறைமுகமாக 23 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் பிரதமர் இல்ல வளாகம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. 30,351 ச.மீ., பரப்பில் அதிகபட்சம் 12 மீ., உயரத்தில் அமைக்கப்படுகிறது.