வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி அரசியல் வட்டாரங்களில், தமிழக அரசியல் விவகாரம் ஒன்று பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது, நடிகர் கமல்ஹாசன் துவக்கி நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி, விரைவில் காங்கிரசில் இணைந்துவிடும் என்பது தான் அந்த பேச்சு.
![]()
|
இந்த இணைப்பு தொடர்பாக, காங்கிரசின் சீனியர் தலைவர் கே.சி. வேணுகோபால், கமலுடன் மூன்று கட்ட பேச்சு நடத்தி முடித்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து ராகுலும், கமலுடன் ஆலோசனை நடத்திஉள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணைப்பிற்கு ராகுல் ஓகே சொன்னதோடு, அதற்கான வேலைகளை செய்யுங்கள் என கமலிடம் சொல்லிவிட்டாராம்.
![]()
|
புதுடில்லியில் அடிக்கடி காங்., தலைவர்களை சந்தித்து வரும் வி.சி., தலைவர் திருமாவளவனும் கமலுக்கு ஆதரவாக, காங்., மேலிட தலைவர்களிடம் பேசியுள்ளாராம்.
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த காங்., தலைவருமான காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ல் மக்கள்நீதி மய்யம் காங்.,கில் இணையுமா அல்லது இந்த ஆண்டு இறுதியில் இணையுமா என்பது குறித்து இரண்டு தரப்பும் விரைவில் முடிவு செய்யும் என சொல்லப்படுகிறது.
எது எப்படியோ, சத்தியமூர்த்தி பவனில் இன்னொரு கோஷ்டி உருவாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement