வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா, கட்சியின் பல பொதுச்செயலர்களில் ஒருவராக இருந்தாலும், இவருடன் கலந்து ஆலோசித்த பின் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
![]()
|
பெண் சுதந்திரம், மகளிருக்கு அதிக பதவிகள் வழங்க வேண்டும் என்பதில், பிரியங்கா பிடிவாதமாக இருக்கிறார். கர்நாடகாவில் காங்., மாபெரும் வெற்றி பெற்ற பின் அவர் உற்சாகத்தில் உள்ளார்.
இந்நிலையில், காங் பெண் எம்.பி.,க்கள் மற்றும் கட்சியின் மகளிர் அணியினர் சிலர் சமீபத்தில் பிரியங்காவை சந்தித்து புகார் அளித்தனர். அப்போது, 'கட்சியில் நீங்கள் பெண்களுக்கு அதிக ஆதரவு தருகிறீர்கள், ஆனால் கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை' என, அவர்கள் கேட்டனராம்.
![]()
|
இதற்கு பிரியங்கா ஒரே வரியில் பதில் சொன்னாராம். 'மிக முக்கிய பதவி ஒன்றில் விரைவில் பெண் ஒருவர் வருவார்' என அவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் இவர் நீக்கப்பட்டு அந்த பதவிக்கு பிரியங்கா வருவார் என காங்., வட்டாரங்களில் தற்போது பேச்சு அடிபடுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement