வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜூன் முதல் வாரத்தில் புதுடில்லியில் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஐந்து மிகப் பெரிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
![]()
|
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரு முக்கிய தலைவர்களும் இணைந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனராம்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் மீது பா.ஜ., தலைவர்களுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். கட்சியின் தேர்தல் வியூகத்தில் பங்கேற்பது, களத்தில் இறங்கி பா.ஜ.,விற்காக வேலை செய்வது என ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறது.
![]()
|
இந்நிலையில் இந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொஸபலே இருவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் 2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகம், கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்விக்கான காரணங்கள் என பல விஷயங்கள் குறித்து அலசப்பட உள்ளதாம். மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சியை அமைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாம்.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அமல்படுத்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது.