மாநாட்டில் பங்கேற்க ‛கோமாட்சு' தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
மாநாட்டில் பங்கேற்க ‛கோமாட்சு' தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மாநாட்டில் பங்கேற்க ‛கோமாட்சு' தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை-ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் முகாமிட்டுள்ள, முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள், இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் 'கோமாட்சு' தொழிற்சாலையை பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து, காட்சி படங்களுடன், முதல்வருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.பின், அந்நிறுவனத்தின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் முகாமிட்டுள்ள, முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள், இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் 'கோமாட்சு' தொழிற்சாலையை பார்வையிட்டார்.latest tamil news


தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து, காட்சி படங்களுடன், முதல்வருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பின், அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் டகாயுகி புரோகுஷி மற்றும்கோ கமாடா ஆகியோருடன், முதல்வர் கலந்துரையாடினார்.

சென்னை ஒரகடம் 'சிப்காட்' தொழிற்பேட்டையில், சுரங்க உபகரணங்கள், 'ஹைட்ராலிக்' அகழ்வாய்வு இயந்திரம் தயாரித்து வரும், 'கோமாட்சு' ஆலையை விரிவாக்கம் செய்யும்படி, முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

கட்டுமானம், சுரங்கம் போன்ற மிக கடுமையான மனித உழைப்பை கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் செய்து முடிக்கும் கருவிகளை உற்பத்தி செய்யும், 'கோமாட்சு' நிறுவன ஒசாகா தொழிற்சாலையை பார்வையிட்டேன்.


latest tamil news


அந்நிறுவனம் தமிழகத்தில் மேலும் முதலீடுகளை செய்ய வலியுறுத்தினேன். ஜன., மாதம் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தேன்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட உலக புகழ் பெற்ற ஒசாகா கோட்டையை, முதல்வர் பார்வையிட்டார். தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் கிருஷ்ணன், தமிழக வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

Soumya - Trichy,இந்தியா
28-மே-202319:43:33 IST Report Abuse
Soumya கட்டிங் கமிஷன் எல்லாம் பேசி முடிச்சிட்டிங்களா ஐயா
Rate this:
Cancel
28-மே-202317:29:24 IST Report Abuse
அப்புசாமி எய்ம்ஸ் கட்ட நிதி ஏன் குடுக்கலைய்யம்? கேட்டு பதில் சொல்லுங்க தளபதி.
Rate this:
Cancel
28-மே-202317:09:41 IST Report Abuse
kulandai kannan இந்த செய்தி கோமாட்சு அதிபருக்கு தெரியுமா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X