வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
![]()
|
இது தொடர்பாக, அமலாக்கத் துறையின் 'டுவிட்டர்' பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 25-ம் தேதி, 'கல்லால் குரூப்' உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.3 கோடி ரூபாய் அசையா சொத்துகளும், வங்கி கணக்கில் இருந்த 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, 'லைக்கா' சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய எட்டு இடங்களில், இம்மாதம் 16-ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது நடிகரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதியுடன் தொடர்புடைய, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' மற்றும் லைக்கா நிறுவனங்களுக்கு இடையே கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், சென்னை வேளச்சேரியில் உள்ள உதயநிதியின் நெருங்கிய நண்பர் வீடு, எழும்பூர் எத்திராஜ் சாலையில் உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் பாபுவின் வீடு, அலுவலகத்தில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
![]()
|
அதைத் தொடர்ந்து, 17-ல் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பாபு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் 36.3 கோடி ரூபாய் சொத்துக்கள், வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
அறக்கட்டளை, ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்றும், உதயநிதிக்கு இதில் பெரிய பங்கு ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement