வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி தட்டுப்பாடின்றி கிடைக்க, 48 கோடி ரூபாய் செலவிட, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது.
![]()
|
பெரம்பலுார், நாமக்கல், சேலம், துாத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடக்கிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், வெளி மாநிலங்களில் இருந்து, வெங்காயம் மற்றும் தக்காளி எடுத்து வரப்படுகிறது.
அங்கு விளைச்சல் குறையும் காலங்களில், தமிழகத்தில் வெங்காயம், தக்காளி விலை உயர்கிறது.
எனவே, ஆண்டு முழுதும் சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான புதிய முயற்சியை, தோட்டக்கலைத் துறையினர் துவக்கியுள்ளனர்.
இதற்காக, வெங்காயம் சாகுபடி நடக்கும் மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், சேமிப்பு கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத் தாள் பிரித்தெடுக்கும் கருவி ஆகியவை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
![]()
|
இதற்காக, 29 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதன் வாயிலாக சந்தைக்கு வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, தக்காளி உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில், விதைப்பு முதல் அறுவடை வரையும், அவற்றை மதிப்பு கூட்டவும், பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இதற்காக, 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பருவம் இல்லாத காலங்களிலும், தக்காளி நடவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆண்டு முழுதும் தக்காளி கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement