புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று(மே 28) காலை 7.30 மணிக்கு தமிழக பாரம்பரிய நாதஸ்வர இசையுடன் பூஜை நடைபெற்றது. பூஜையில் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா துணைத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக ஆதினங்கள்21 பேர் பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கினர். இவர்கள் அளித்த செங்கோலை பெற்று சபாநாயாகர் இருக்கை அருகே வைத்தார். முன்னதாக செங்கோலை நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து பிரதமர் வணங்கினார். நிகழ்ச்சிகள் தமிழிலும், இந்தியிலும் தொகுப்பாளர்கள் வழங்கினர்.

65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பார்லி., கட்டடத்தின் கட்டுமானம் 2021 ஜனவரியில் துவங்கியது. இது ரூ.1250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் அமைந்துள்ள லோக்சபாவில் 888 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 384 எம்.பி.க்களும் அமர முடியும்.
பார்லிமென்ட் கூட்டு அமர்வில் 1272 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லோக்சபாவின் வடிவமைப்பு தேசிய பறவையான மயில் மற்றும் ராஜ்யசபாவின் வடிவமைப்பு தேசிய மலர் தாமரையின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்நிலையில், புதிய பார்லிமென்ட் திறப்பு விழா நிகழ்ச்சிகள், இன்று(மே 28) காலை 7:30 மணிக்கு பார்லிமென்ட வளாகத்திற்கு வெளியே காந்தி சிலை அருகே ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.
நிகழ்ச்சியில் போது, ஆதினங்கள் பிரதமர் மோடியிடம் தமிழக செங்கோலை கொடுத்தனர். இதையடுத்து பிரதமர் மோடி செங்கோல் முன் தலை வணங்கினார். பூஜையின் போது, ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
முன்னதாக பிரதமர் மோடி பார்லிமென்ட் வளாகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினத்தால் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட செங்கோலை, பிரதமர் மோடி காலை 8.30 மணிக்கு மேல் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார்.