புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில், லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். இதற்கு, பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்ட அறிக்கை:
பாரதத்தின் நீண்ட நாகரிக வளர்ச்சியை போற்றி விஸ்வகுருவின் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான நவீன பார்லி., கட்டடம் வேண்டும் என்ற தேசத்தின் நீண்ட கால விருப்பத்தை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி எனக் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:
வரலாற்று சிறப்பு மிக்க தருணம். புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு தவத்திரு ஆதினங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித செங்கோலை லோக்சபாவில் பிரதமர் மோடி நிறுவினார். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். கோளறு பதிகத்தில் வரிகள் ஒலிக்க, தமிழர்களின் கலாச்சார அடையாளமான செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்துடன் நமது பிரதமரால் இன்று பார்லிமென்டில் நிறுவப்பட்டது எனக் கூறியுள்ளார்.