ஸ்ரீநகர்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரின் தென் கிழக்கே இன்று( மே 28) காலை10:19 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகரின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.